iyer for ganapathi homam in chennai
pandit for ayush homam in chennai
 pandit for thithi in chennai
 iyer for navagraha homam in chennai
iyer for ganapathi homam in chennai
pooja services in chennai
 iyer for laxmi kubera homam in chennai
sandhyavandanam video CD online
varalakshmi vratham video CD online
vinayaka chaturthi video CD online
homam services in chennai
puja services in chennai
gokulashtami pooja video CD online
homam services in chennai
homam services in chennai
puja services in chennai
iyer for marriage in chennai
iyer for navagraha homam in chennai
 pandit for marriage in chennai
 durga pooja video CD online
tharpanam video CD online
homam services in chennai
puja services in chennai
iyer for marriage in chennai
iyer for navagraha homam in chennai
 pandit for marriage in chennai
 durga pooja video CD online
tharpanam video CD online
Upcoming Events
Date Event Description
9-11-2018 கார்த்திகை மாத மகிமை
*எல்லாருடைய மனதிலும் நிம்மதி ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தில் பதிவு செய்கிறேன். ஆகாச தீபம் 8-11-18 முதல் 07-12-18 வரை* *कार्तिके तिलतैलेन सायङ्काले समागते ।* *आकाशदीपं यो दद्यात् मासमेकं हरिं प्रति ।**महतीं श्रियमाप्नोति रूप सौभाग्य संपदम् ।।* *கார்த்திகே தில தைலேந ஸாயங்காலே ஸமாகதே।* *ஆகாஶதீபம் யோதத்யாத் மாஸமேகம் ஹரிம் ப்ரதி ।**மஹதீம் ஶ்ரியமாப்நோதி ரூப ஸௌபாக்ய ஸம்பதம் ।।* ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை மாதம் அமாவாசை வரை ஒரு மாதம் முழுவதும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் தனது வீடு அல்லது ஆலயத்திலோ உயரமான ஸ்தம்பத்தில எட்டு திரியுடன் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அல்லது தனது விட்டு மொட்டைமாடி போன்ற உயரமான இடத்திலும் தீபமேற்றலாம். 

இதன் ஒளியானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். *दामोदराय नभसि तुलायां लोलया सह ।**प्रदीपं ते प्रयच्छामि नमोऽनन्ताय वेधसे ।।**தாமோதராய நபஸி துலாயாம் லோலயா ஸஹ ।**ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோநந்தாய வேதஸே ।।*என்னும் ஶ்லோகம் சொல்லி தீபத்தை வைத்து நமஸ்காரம் செய்யவும் இவ்வாறு மாதம் முழுவதும் ஆகாஶ தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்களாவது, அல்லது ஒரு நாளாவது அருகிலுள்ள மஹாவிஷ்ணு கோயில் சென்று இவ்வாறு தீபம் ஏற்றி வைத்து நமஸ்கரிக்கலாம். இதனால் அனைத்துத் துன்பங்களும் குறிப்பாக அனைத்துக் கடன்களும் விலகும். லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்*நிர்ணய ஸிந்து*டாக்டர்.கணேச சாஸ்த்ரிகள்

14-11-2018 திருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....
தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்.

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும் 


அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை 


தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்